மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக விளையாட்டு விழா எல்லே போட்டியில் ஏறாவூரப்பற்று செங்கலடி பிரதேச கழகங்கள் சம்பியன் .
.35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மாணிக்கபோடி சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் 05 ஆண்கள் அணிகளுயும் 05 மகளீர் அணிகளும் கலந்துகொண்டன.
இறுதிப்போட்டியில் ஏறாவூரப்பற்று செங்கலடி பிரதேச இளைஞர் கழகம் சார்பில் பங்கு பற்றிய செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழக மகளீர் அணியும் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக ஆண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.
இறுதிப்போட்டியில் ஏறாவூர்ப்பற்று சார்பில் செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் கோறளைப்பற்று தெற்கு சார்பில் முறக்கொட்டாஞ்சேனை இளைஞர் கழகங்களிடையே நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி வழங்கப்பட்ட 30 பந்துகளில் 10 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெத்தாடிய முறக்கொட்டாஞ்சேனை இளைஞர் கழக அணி 04 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஓட்டங்களின் அடிப்படையில் 06 ஓட்டங்களால் செங்கலடிகோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி வெற்றி பெற்று 2025ம் ஆண்டின் சம்பியபனது.
இறுதிப்போட்டியில் ஆண்கள் கழகம் சார்பில் களுவன்கேணி பாரதி இளைஞர் களக அணியும் ஏறாவூர் அகமட் பரீட் இளைஞர் கழக அணியும் மோதின இதில் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

0 comments:
Post a Comment