மட்டக்களப்பு, மண்முனை தென் மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பெண்களுக்கு எதிரான வண்முறையை தடுக்கும் பால் நிலை அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்திட்ட இறுதி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ( 11-12-2025ம் திகதி ) மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நடை பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் திட்டமிடலில் , பெண்கள் அபிவிருந்தி உத்தியோகத்தர் ரி.கெளசல்யாவின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு நடை பெற்றது.
பெரன்டினா நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம் பெற்ற இந் நிகழ்வின் போது பால் நிலை, சமத்துவம் தொடர்பில் விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம் பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், பெரன்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ். டினேஸ், கண்காணிப்பு உத்தியோகத்தர் எம்.பி. பவிக்காந் கலந்து உள்ளிட்டோர் கொண்டு கருத்துரைகளை வழங்கினர்
இந்நிகழ்விலும் விழிப்பூட்டல் கருத்தரங்கிலும் சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.






0 comments:
Post a Comment