பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணையடி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணையடி கிராமத்திற்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் இன்றைய தினம் ( 08 ) வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு , பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கபிரதி நிதிகள் , மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர் வை. தினேஷ்குமார் , கிராம சேவை உத்தியோகத்தர் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தமது தேவையை அறிந்து பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்த பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினருக்கு பொதுமக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.



0 comments:
Post a Comment