மட்டக்களப்பில் ஏறாவூர்ப்பற்றில் உள்ள கால்நடை வளர்ப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு கித்துள் பிரதேசத்தில் உள்ள மேசக்கல் மேய்ச்சல் தரைப் பிரதேசத்திற்கு( 01) பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் சென்றிருந்தார்.
அவ்வேளையில் சுமார் 50 பண்ணையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார்கள்.
அந்த வகையில் மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் அத்துமீறி காடுகளை அழித்தல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல் என்பவற்றால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரை குறைந்து கொண்டு செல்வதைக் குறிப்பிட்டனர்.
மேலும் தமது மேய்ச்சல் தரை நிலம் பாதுகாக்கப்படாவிட்டால் தமது கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் போய் விடும் என்பதைக் கூறியதுடன்,
எனவே சட்ட விரோதமாக காடுகளை அழிப்பதை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பாக அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், வனவளத் திணைக்கள பிராந்திய அதிகாரி மற்றும் கிராம சேவகர் ஆகியோருக்கு இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எடுத்துக் கூறினார்.
அவர்கள் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதனைக் கூறியிருந்தனர்.
அத்தோடு காடு அழிப்புகள் தொடர்பாக நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிடுவதற்காக காட்டு வழியினூடாகச் சென்று அவதானிக்கப்பட்டது.
இதன் போது காடு அழிப்புகள் தொடர்பாக சில பகுதிகளைப் பார்வையிட்டார், உரிய அதிகாரிகளிடம் இவ்விடயத்தை எடுத்துக் கூறியிருந்தார் .
அவர்கள் உடனடியாக அவ்விடத்திற்கு கிராம உத்தியோகத்தர், வனஜீவராசி கள உத்தியோகத்தர் ஆகியோரை அனுப்பி வைப்பதாக கூறினார்.
மட்டக்களப்பின் இயற்கை வளமான காடு அழிக்கப்பட்டால் காட்டு யானைகள் கிராமங்களை நோக்கியும், வருவதைக் தடுக்க முடியாமல் போய் விடும் இவ்விடயம் தொடர்பாக சில பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது.
மேலும் சட்டப்படி பண்ணையாளர்கள் ,விவசாயிகள் நடந்த கொள்ளும்படி ஆலோசனை பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது




0 comments:
Post a Comment