Monday, December 22, 2025

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

 






(ஆர்.தஷ்வினி)

வாகரை அன்மித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில்  தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கு EYE power Network  அமைப்பின் ஏற்பாட்டில் கல்குடா வலயக் கல்வி  பணிப்பாளர் ஒழுங்கமைப்பில் ஆரம்ப கட்டமாக   03 பாடசாலைகளுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.


மட்/ககு/வம்மிவட்டவான் கலைமகள்  வித்தியாலயம்,மட்/ககு/மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை,மட்/ககு/கண்டலடி அருந்ததி வித்தியாலயம்  என மொத்தமாக 03 பாடசாலைகளை தெரிவு செய்து   EYE POWER NETWORK  அமைப்பின் தலைவர்  இராஜரெட்னம் நிரோசன்,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள்,

 பாடசாலை  அதிபர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள் முன்னிலையில்      50 ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Friday, December 12, 2025

ரயில் சேவையில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி



இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

 
இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை விடுத்தார்.

மட்டு. மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பால் நிலை அடிப்படையில் வன்முறை - விழிப்பூட்டல் நிகழ்வு



மட்டக்களப்பு, மண்முனை தென் மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பெண்களுக்கு எதிரான வண்முறையை தடுக்கும் பால் நிலை அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்திட்ட இறுதி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ( 11-12-2025ம் திகதி ) மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நடை பெற்றது.


பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் திட்டமிடலில் , பெண்கள் அபிவிருந்தி உத்தியோகத்தர் ரி.கெளசல்யாவின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு  நடை பெற்றது.

பெரன்டினா நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம் பெற்ற இந் நிகழ்வின் போது பால் நிலை, சமத்துவம் தொடர்பில் விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம் பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், பெரன்டினா  நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ். டினேஸ், கண்காணிப்பு உத்தியோகத்தர் எம்.பி. பவிக்காந் கலந்து உள்ளிட்டோர் கொண்டு கருத்துரைகளை வழங்கினர்

இந்நிகழ்விலும் விழிப்பூட்டல் கருத்தரங்கிலும் சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.














Monday, December 8, 2025

உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !






 பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணையடி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !


மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணையடி கிராமத்திற்கு  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  120 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் இன்றைய தினம் ( 08 )  வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்விற்கு , பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கபிரதி நிதிகள் , மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர் வை. தினேஷ்குமார் , கிராம சேவை உத்தியோகத்தர் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது தமது தேவையை அறிந்து பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்த பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினருக்கு பொதுமக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.


Sunday, December 7, 2025

22 வயது இளைஞன் மரணம்!!

 




மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்;;ட இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்த உறவினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு தலைமையகத்திற்கு அருகில் உள்ள வங்கியின் கிளையொன்றுக்கு முன்பாகயிருந்த துவிச்சக்கர வண்டியொன்றினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சின்னஉப்போடையினை சேர்ந்த 22வயது இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவரிடம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதுடன் இவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான வாக்குமூலம் பெறுவதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் இதன்காரணமாகவே இளைஞன் நோய்தாக்கத்தி;றகுள்ளானதாகவும் தெரிவித்து உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தினார்கள்.

குறித்த இளைஞனின் மரண விசாரணை அறிக்கை கிடைக்கவில்லையெனவும் அது தொடர்பான அறிக்கைகிடைக்கப்பெற்றதும் விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் வீதியை மறித்து உறவினர்கள் போராட்டம் நடாத்தியதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தனது மகன் சைக்கிளை எடுத்துச்சென்றது தொடர்பில் தகவல் கிடைத்ததும் உறவினர்களினால் அதனை மீளகொண்டு ஒப்படைத்தபோதிலும் தனது மகனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கைதுசெய்துள்ளதாகவும் தனது மகனை பொலிஸார் தாக்கியுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும் குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் இருந்ததாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுதடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த இளைஞனின் உறவினர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்தியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அங்குவந்த பொலிஸார் வீதியில் நின்றவர்களை வீதிக்கு அருகில் அழைத்துச்சென்று அவர்களுடன் நிலைமையினை தெளிவுபடுத்தினர். இதன்போது சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.லீலாரத்தன அங்குவந்து கலந்துரையாடி இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

தமது பிள்ளை வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம்வரும்போது நல்ல நிலையிலேயே இருந்ததாகவும் இது தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்தார்.






Tuesday, December 2, 2025

நிவாரணபஂபொருட்கள் சேகரிப்பு!!







அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணபஂபொருட்கள் சேகரிக்கும் பணி
(02) செவ்வாய்க்கிழமை  காலை 8:30 மணியளவில் பேத்தாழை பொது நூலகத்திற்கு முன்பதாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணபஂபொருட்கள் சேகரிக்கும் பணி ஆனது இடம்பெற்று கொண்டிருக்கின்றது.