அரச வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகள், இறைச்சிக் கடைகள் ,சூதாட்ட விடுதிகள், விலங்கு அறுப்பகங்கள், பந்தயப் பதிவகங்கள் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்தத் தற்காலிக மூடல்கள் இன்று (27) முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் சமய வழிபாடுகளை அமைதியான முறையில் மேற்கொள்வதற்கும், வெசாக் காலப்பகுதியின் புனிதத் தன்மையைப் பேணுவதற்கும் ஏதுவாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment