Saturday, April 11, 2026

மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி- 2026!!!










 ஆவ் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (11) சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இந்துக்கல்லூரி மைதானம் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட  வித்யாலயத்தின்  அதிபர் திருமதி.ச.கி. அருள்தாஸ் தலைமையில் இடம் பெற்றது.




இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  உதவிக் கல்வி பணிப்பாளர் த.கோகுலகுமாரன்சிறப்பு அதிதியாகஆரம்பப் பிரிவு, பாடசாலை மேம்பாட்டுத் திட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.பிரகாஷ்  அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில்முல்லை இல்லம் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,மருதம்  இல்லம் 148 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,நெய்தல்  138 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.


இப்போட்டிகளில் இடம் பெற்ற  அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.


Thursday, April 9, 2026

மட்/ஜோசப்வாஸ் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி- 2026!!!



மட்டக்களப்பு மட்ஜோசப்வாஸ் வித்தியாலய 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(09)வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்யாலயத்தின்  அதிபர் சி .என். சில்வெஸ்டர் 

 தலைமையில் இடம் பெற்றது.


தாண்டவன்வளி  தேவாலயே தலைமை அருட்தந்தை டி. ஏ ஜூலியன்  அவர்களின் இறை பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன.


இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி (தமிழ்)  பணிப்பாளர்

 சகுந்தலா சுதர்சன்

 அவர்களும் சிறப்பு அதிதியாக

 மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி  பணிப்பாளர்ஏ.பிரகாஷ் (ஆரம்ப பிரிவு) அவர்களும் ,வலயக்கல்வி விளையாட்டிற்கான ஆசிரியர்களின் 

ஆலோசகர் கே.ரவீந்திரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக

அருட்தந்தை பிரன்னர் சிலர், ஏ.ஜே.புஷ்பராஜா (பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகர்) ,பழைய மாணவர் சங்க செயலாளர் ஏ. ஹரிஹரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில்ஜோசப்  இல்லம் 608 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,

அன்ரனி இல்லம் 500 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,

 கிங்ஸ்லி 411 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.


இப்போட்டிகளில் இடம் பெற்ற ஆயுதங்களை ஏந்திய வண்ணமான அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, ஆகியன அனைவரதும் கவ






னத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.