Tuesday, June 30, 2026
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய லெத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை
அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணையில் சென்றதன் பின்னர், வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என நீதவான் சந்தேகநபருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கருத்துகளையும், சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ முன்வைத்த வாதங்களையும் பரிசீலித்த பின்னரே நீதவான் சந்தேகநபருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பயணம் நிறைவு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடிந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் இவான் பெபஜியோர்கியு (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான வலிமையை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை நிலைத்தன்மையை உறுதிப்படுத்த நாணயக் கொள்கையானது மிகுந்த விழிப்புடனும், தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் இருக்க வேண்டும் என நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்த சீர்திருத்த வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்த நிபுணர்கள் குழுவினர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் 'விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்' கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்க அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்தனர்.
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 146.53 புள்ளிகளால் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் (0.65%) அதிகரிப்பைப் பதிவு செய்து, இன்று 22,263.28 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 1.75 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
காலி சிறைச்சாலையில் கைதி மரணம்: உடலில் போதைப்பொருள் இருந்தமை உறுதி
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட குறித்த நபர் கடந்த 2025 நவம்பர் 22ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
காலி, வித்யாலோக பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதானவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கடந்த 28 ஆம் திகதி காலை திடீர் சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
எனினும், அவரது சிறுநீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் அதில் போதைப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் இரத்த மாதிரிகளை மேலதிக பகுப்பாய்விற்காக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்திய மரண விசாரணை அதிகாரி, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
காலி காவல்துறையின் முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் லலித் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், காவல்துறை சார்ஜன்ட் சரத் இது தொடர்பான சாட்சியங்களை வழிநடத்தினார்.
ஹப்புத்தளையில் குளவி தாக்குதல் – தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்தவர்கள் இரண்டு பெண்களும், மூன்று ஆண்களும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் உடனடியாக ஹப்புத்தளை பங்கட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சிகிச்சைக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனையோர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி உயிரிழப்பு
தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்கவுக்கு பிணை
மத்தேகொட பிரதேசத்தில் உள்ள தனது உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், காவல்துறையால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டதன் மூலம் சமூகத்தில் பாரிய பரபரப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்திருந்ததாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் இன்று (30) தனது சட்டத்தரணிகள் ஊடாக காவல்துறை நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
iPhone 18 Pro தொடர்பான மிகப்பெரிய தகவல் கசிவு!
இந்தத் தொலைபேசியின் தோற்றம் தொடர்பான விடயங்கள் தற்போது இணையத்தளங்களில் கசிந்துள்ளன.
இணையத்தளங்களில் வெளியான தகவல்களின்படி, iPhone 18 Pro மொடல் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் Drop Test (கீழே விழும் நிலைத்தன்மை சோதனை) தொடர்பான காணொளி மற்றும் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
இந்த தகவல் கசிவின் மூலம், புதிய iPhone மொடலின் வடிவமைப்பு, கேமரா அமைப்பு மற்றும் வெளிப்புற கட்டமைப்பு குறித்து சில முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளதாக தொழில்நுட்ப தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த தகவல்கள் குறித்து அப்பிள் நிறுவனம் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனவே, இணையத்தில் பரவி வரும் இந்த தகவல்கள் மற்றும் கசிந்த படங்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பதால், அவற்றை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அம்பாறை வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு – ஸ்னைப்பர் துப்பாக்கியும் சிக்கியது
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த ஆயுதங்கள் மரப்பொந்து ஒன்றின் உள்ளே நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீண்டகாலமாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் மேலதிக தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காவல்துறை முன்னெடுத்து வருகிறது.
குடிநீர் விநியோக நிறுவனம் என்ற போர்வையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 341.30 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (26) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 341.87 ஆக காணப்பட்டது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மொரோக்கோ வரலாற்று வெற்றி!
தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய்
மட்டக்களப்பு புதுப்பாலத்திற்கு பெய்லி பாலம் - வியாழக்கிழமை நடவடிக்கைகள் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் 85,712 இடங்களில் டெங்கு சோதனை : 7,188 இடங்களில் நுளம்பு பெருகும் அபாயம்...
நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போலி வருமான வரி அதிகாரி ஒருவர் கைது
வெனிசுவேலா நில அதிர்வு - உயிரிழப்பு 1,700 ஆக உயர்வு
காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதல்: சிறுமி உட்பட 8 பேர் பலி
Monday, June 29, 2026
2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: கிரிக்கெட் தகுதிச் சுற்று அளவுகோல்களை வெளியிட்டது ஐசிசி!
2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டின் தகுதிச் சுற்றுகள் மற்றும் அணிகளைத் தேர்வு செய்வதற்கான அளவுகோல்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இன்று (29) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.
ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் ஆறு அணிகளில் நான்கு இடங்கள் கண்டங்கள் வாரியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதற்காக 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு 20 தரவரிசை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதன்படி, அந்தந்த கண்டங்களில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தகுதியுள்ள நான்கு அணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக, ஆசியாவில் உயர்மட்ட தரவரிசையில் இருக்கும் அணி நேரடித் தகுதியைப் பெறும்.
பெண்கள் பிரிவுக்கான தகுதி
பெண்கள் பிரிவில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் வெவ்வேறு கண்டங்களிலிருந்து தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் முதல் நான்கு அணிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.
இதில் அவுஸ்திரேலியா (ஓஷானியா), தென் ஆபிரிக்கா (ஆபிரிக்கா) மற்றும் இங்கிலாந்து (ஐரோப்பா) ஆகியவை தகுதிக்கு நெருக்கமாக உள்ளன.
பிரித்தானியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதால், அந்த நாட்டுக்காக இங்கிலாந்து மட்டுமே ஒதுக்கீட்டுப் பட்டியலில் கருதப்படும்.
மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் அமெரிக்கா
மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், அது பல கரீபியன் நாடுகளின் கூட்டு அமைப்பாக இருப்பதால், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அங்கீகாரம் பெற்ற தனித்துவமான தேசிய ஒலிம்பிக் குழுவாக (NOC) கருதப்படாது.
எனவே, அந்த அணியால் நேரடியாக ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.
அதேபோல், போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஐசிசி தரவரிசையில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தைப் பிடித்திருப்பதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஒரு இடத்தைப் பெறும்.
இறுதி தகுதிச் சுற்று
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஆறாவது இடத்தைத் தீர்மானிக்க, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் 'இறுதி ஒலிம்பிக் உலகளாவிய தகுதிச் சுற்று' தனித்தனியாக நடத்தப்படும்.
இதில் ஐசிசி தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெறாத அடுத்த எட்டு உயர்மட்ட அணிகள் மோதும்.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணி இடம்பெற்றால், அந்தப் பிராந்தியத்தில் எந்தத் நாடு ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பதைத் தீர்மானிக்க பிரத்யேகமாக 'மேற்கிந்திய தீவுகள் பிராந்திய தகுதிகாண் சுற்று' ஒன்றினை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்யும்.
துப்பாக்கியை தவறவிட்ட காவல்துறை அதிகாரிக்கு விளக்கமறியல்!
யட்டியந்தோட்டை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, தனது கடமைநேர துப்பாக்கியை தவறவிட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களை மீண்டும் ஒப்படைக்கத் தவறியமைக்காக, சீதாவாக்கபுர வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 27 ஆம் திகதி குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதாவாக்கபுர வலய குற்ற விசாரணைப்பிரிவும், சீதாவாக்க சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் விசேட நடவடிக்கைப் பிரிவும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் துப்பாக்கிச் சூடு: ஐவர் உயிரிழப்பு
ஜேர்மனியின் வடக்கே உள்ள ஸ்டேட் (Stade) நகரில் அமைந்துள்ள இளைஞர் மன்றம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் சந்தேகநபர் என்றும் காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் வயது அல்லது தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், தற்போது பொதுமக்களுக்கு மேலதிக அச்சுறுத்தல் ஏதுமில்லை என காவல்துறை உறுதியளித்துள்ளது.
சம்பவ இடத்துக்கு பெருமளவிலான அவசரகாலப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
லொக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு
ரிதீமாலியத்த, லொக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் வள்ளமொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருமே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டியிலிருந்து சென்ற 33 பேர் கொண்ட குழுவினர், நேற்று (28) காலை லொக்கல் ஓயா நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள தனியார் சுற்றுலா தளம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், அந்த குழுவினர் நீராடுவதற்காக நீர்த்தேக்கத்தின் நடுவே உள்ள இடமொன்றுக்கு செல்வதற்கு, இரண்டு சிறிய வள்ளங்களை ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்ட ஒழுங்கற்ற வள்ளமொன்றை ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியிலிருந்து கரைக்கு திரும்பும் போது, இந்த வள்ளம் திடீரென கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து நடந்த சமயம், மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் அதில் பயணம் செய்துள்ளனர். இதில், உயிரிழந்த இருவர் உயிர் காக்கும் அங்கிகளை அணியவில்லை எனவும், அவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
காவல்துறை மற்றும் அந்த பகுதி மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், இருவரும் உடலங்களாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.