Wednesday, March 11, 2026

மட்/அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!






(ஆர். நிரோசன்)

மட்டக்களப்பு மட்/அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (11) புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் வி. முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஜி. முகமட் பாசில் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் விளையாட்டிற்கான உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி. லவக்குமார் அவர்களும், கௌரவ அதிதியாக விஞ்ஞான பாடத்திட்டத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ். ஞானசேகரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவில் யமுனை இல்லம் 739 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், கங்கை இல்லம் 695 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், காவேரி இல்லம் 685 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.



இந்நிகழ்வில் நடைபெற்ற வண்ணமயமான அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்திய நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!!

 



மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(10) செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் இடம் பெற்றது மற்றும் புளியந்தீவு மெதடிஸ் தேவாலயே தலைமை போதகர் ஏ.சேம் சபேந்திரன் அவர்களின் இறை பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன.


இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி  பணிப்பாளர் என். குகதாசன்,  இலங்கை 38-வது இராணுவபடை அதிகாரி மேஜர் கே. எம். தமீம் அவர்களும் கௌரவ அதிதிகளாக. மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான

உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், முன்னாள் பாடசாலை பழைய மாணவர் சங்கத் தலைவர் வை.கோபிநாத் , பாடசாலையின் செயலாளர் யூ.மயூரன், மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான ஆசிரியர்களின் ஆலோசகர் கே.ரவீந்திரன்,சாட்டர்லைட்  விளையாட்டுக் கழக தலைவர் சக்திரமணன், லண்டனின் உள்ள சாட்டர்லைட் உறுப்பினர் ஜி. ஜீவகுமார்  ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில் காட்மன் இல்லம் 357 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,சோமநாதர் இல்லம் 349 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,

ஓல்ட் இல்லம் 313 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும்,

கோல்டன் இல்லம் 292 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.


இப்போட்டிகளில் இடம் பெற்ற ஆயுதங்களை ஏந்திய வண்ணமான அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து  கொண்டு சிறப்பித்தனர்.


(ஆர்.நிரோசன்)

Thursday, March 5, 2026

150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கோலாகல இல்ல விளையாட்டுப் போட்டி!!

 











 மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை தனது 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியை கடந்த புதன்கிழமை (04) மாலை 3.00 மணியளவில் வெப்பர் மைதானத்தில்  சிறப்பாக நடத்தியது.


பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அருட்தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அவர்களின் ஆசீர்வாதச் செய்தியுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகம் (குழந்தை மருத்துவம்) தலைமை விரிவுரையாளர் டாக்டர் ஏஞ்சலா அருள்பிரகாசம் அந்தோணி அவர்கள் கலந்து கொண்டார்.


கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி (நிர்வாகம்) அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி என். மகேந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி உடற்கல்வி விரிவுரையாளர் திருமதி டி. மோகனக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறப்பு அதிதிகளாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி டி. பவன் மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் வைத்தியர் நிரோஜா விமலராஜன் ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.


போட்டிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரீடா இல்லம் 524 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை கைப்பற்றியது. 434 புள்ளிகளுடன் காசில்டா இல்லம் இரண்டாம் இடத்தையும், 420 புள்ளிகளுடன் மாறி இல்லம் மூன்றாம் இடத்தையும், 302 புள்ளிகளுடன் கான்சிலியா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றன.


அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


(ஆர்.நிரோசன்)

Monday, March 2, 2026

மட்டக்களப்பில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்திட்ட நிகழ்வுகள்!!











அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.


அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸ் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் இன்று (01) இடம் பெற்றன.


இதன் போது "விற்கின்ற - அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்" - அகன்று செல்" எனும் வாசகத்தினை மையமாகக் கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


மார்ச் மாதம் 01 முதல் "முழு நாடும் ஒன்றாக - தேசிய செயல்" திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது.


மேலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகள், முற்சக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எமது நாட்டின் வளமான மாணவர்கள், இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை 1818 எனும் இலக்கத்தினுடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள் சாரணமானவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.