நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 44,480 ஆகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் 5ஆம் நாளான இன்று (19), அரச மற்றும் தனியார் அலுவலகங்களைச் சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வருடத்தில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, அதிகளவிலான டெங்கு அவதானம் மிக்க பிரிவாக அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment