Saturday, April 11, 2026

மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி- 2026!!!










 ஆவ் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (11) சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இந்துக்கல்லூரி மைதானம் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட  வித்யாலயத்தின்  அதிபர் திருமதி.ச.கி. அருள்தாஸ் தலைமையில் இடம் பெற்றது.




இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  உதவிக் கல்வி பணிப்பாளர் த.கோகுலகுமாரன்சிறப்பு அதிதியாகஆரம்பப் பிரிவு, பாடசாலை மேம்பாட்டுத் திட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.பிரகாஷ்  அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில்முல்லை இல்லம் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,மருதம்  இல்லம் 148 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,நெய்தல்  138 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.


இப்போட்டிகளில் இடம் பெற்ற  அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.


0 comments:

Post a Comment