ஹப்புத்தளை கல்கந்த தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் இரண்டு பெண்களும், மூன்று ஆண்களும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் உடனடியாக ஹப்புத்தளை பங்கட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சிகிச்சைக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனையோர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment