ஹம்பாந்தோட்டை - அங்குனகொலப்பெலஸ்ஸ சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பெண் ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (29) உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 65 வயதான கைதி என தெரிவிக்கப்படுகிறது.
ஹெரோயின் கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், சிறைச்சாலையில் வைக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குனகொலப்பெலஸ்ஸ மருத்துவமனையில் நேற்று (29) அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்தார்.
உடலத்தின் மீதான பிரேத பரிசோதனை இன்று (30) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment