நுவரெலியா - கொட்டகலை நகரில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டகலை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்குச் சென்றவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோதலில்; ஈடுபட்ட 03 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மோதல் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவி காவல்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் திம்புலபத்தன காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment