Friday, June 26, 2026

மின்சார செலவைக் குறைக்க புதிய முயற்சி - துறைமுகத்தை வந்தடைந்த 7 மின்கல அமைப்புகள்

 

நாட்டின் மின்சார அமைப்பை நிலைப்படுத்தவும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஏழு அமைப்புகள் கொழும்புத் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, பானந்துறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுனதீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள மின் பரிமாற்ற துணை மின்சார நிலையங்களுக்கு அருகில் இந்த ஏழு ஆற்றல் சேமிப்பு அமைப்புகளும் நிறுவப்பட உள்ளன.

துறைமுகங்கள் மற்றும் சிவில் வான் போக்குவரத்து அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த ஏழு அமைப்புகளும் 280 மெகாவாட் மின்சாரத்தைச் சேமிக்கும் திறன் கொண்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவை தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு தினமும் 70 மெகாவாட் மின்சாரத்தை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment