Sunday, June 28, 2026

கல்முனையில் நாயைத் துன்புறுத்திய இளைஞர் கைது

 

கல்முனையில் நாய் ஒன்றைக் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போது, இந்த சம்பவம் நேற்று (27) மாலை கல்முனை அஷ்ரஃப் நினைவு மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்றமை கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கல்முனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment