அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு – பக்மிட்டியா வனப்பகுதியில், புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த ஆயுதங்கள் மரப்பொந்து ஒன்றின் உள்ளே நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீண்டகாலமாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் மேலதிக தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காவல்துறை முன்னெடுத்து வருகிறது.
0 comments:
Post a Comment