தியத்தலாவயிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, பண்டாரவளை - வெலிமடை பிரதான வீதியின் யல்பத்வெல பகுதியில் இன்று (27) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து முதலில் கெப்(Cab) ரக வாகனமொன்றுடன் மோதியதன் பின்னர், வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பாரவூர்தி மற்றும் மின்சாரக் கம்பம் ஒன்றில் மோதி நின்றுள்ளது.
இந்த விபத்தினால் பேருந்து உட்பட ஏனைய வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment