இரத்தினபுரி, இறக்குவானை பகுதியில் வளர்ப்பு யானை ஒன்று தாக்கியதில், இரண்டு பாகன்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது 22 வயதான இளைஞனும் 43 வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இறக்குவானை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த 20 ஆம் இறக்குவானை பகுதியில் இடம்பெற்ற ஊர்வலத்திற்காக 12 யானைகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தன.
ஊர்வலம் நிறைவடைந்ததன் பின்னர், 10 யானைகள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
எனினும், இரண்டு யானைகளை மாத்திரம் அழைத்துச் செல்வதற்கு வாகனங்கள் கிடைக்காமையால், அவை இறக்குவானை பகுதியிலேயே, கடந்த இரண்டு நாட்களாக அவை பராமரிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நீர் அருந்துவதற்காக குறித்த யானைகளை பாகன்கள் அருகில் உள்ள நீர் ஓடைக்கு அழைத்துச் சென்றிந்தபோது அதில் ஒரு யானை பாகன்களை தாக்கியுள்ளது.
இதன்போது, பாகன்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
0 comments:
Post a Comment