அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கன்றுக் குட்டிகளில், மாமிசத்தை உண்ணும் ஒரு வகை ஆபத்தான புழுக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்திலிருந்து கால்நடைகளை இறக்குமதி செய்வதற்கு கனடா உணவு ஆய்வு மையம், தற்காலிகத் தடையை விதித்துள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த பசுக்கள் மற்றும் குதிரைகள் எவையும் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என கனடா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் மாட்டிறைச்சி மற்றும் கால்நடை உற்பத்தியில் முதன்மை வகிக்கும் டெக்சாஸ் மாநிலத்தில், இரண்டாவது கன்றுக்குட்டியிலும் இந்த ஒட்டுண்ணிப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட், கடந்த மாநிலத்தில் 'பேரழிவு அவசரகால நிலை' பிரகடனத்தைச் செய்துள்ளார்.
"இந்த ஒட்டுண்ணிப் பரவல் கோடைக்காலம் முழுவதும் மேலும் பரவக்கூடும்" என ஆளுநர் ஊடகவியலாளர்களிடம் கவலை வெளியிட்டுள்ளார்.
'நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம்' (New World Screwworm) என்று அழைக்கப்படும் இந்த ஒட்டுண்ணிப் புழுக்கள், மனிதர்கள் மற்றும் சூடான இரத்தம் கொண்ட விலங்குகளின் திறந்த காயங்கள் அல்லது சவ்வுப் பகுதிகளில் முட்டையிடும் ஒரு வகை ஈக்களின் மூலம் பரவுகின்றன.
இந்த முட்டைகள் பொரிந்து நூற்றுக்கணக்கான புழுக்களாக மாறும் போது, அவை விலங்குகளின் உயிருள்ள மாமிசத்தைக் குடைந்து தின்னத் தொடங்கும்.
இதற்குக் தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவை அந்த விலங்குகளைக் கொன்றுவிடும் அளவுக்கு ஆபத்தானவை ஆகும்.
கடந்த புதன்கிழமை, மெக்சிகோ எல்லைக்கு அருகில் உள்ள லா பிரையர் நகரில் மூன்று வாரமே ஆன ஒரு கன்றுக்குட்டியின் தொப்புள் கொடிப் பகுதியில் இந்தப் புழுக்கள் கண்டறியப்பட்டன.
டெக்சாஸ் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இந்த ஒட்டுண்ணி கண்டறியப்பட்ட முதலாவது வழக்கு இதுவாகும்.
டெக்சாஸ் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இந்த ஒட்டுண்ணி கண்டறியப்பட்ட முதலாவது வழக்கு இதுவாகும்.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை, சவாலா கவுண்டியில் ஒரு மாதக் கன்றுக்குட்டி ஒன்றில் இரண்டாவது தொற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, குறித்த பிரதேசத்தில், தனிமைப்படுத்தல், நடமாட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment