Saturday, June 13, 2026

பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

 

பழங்குடியினரின் தலைவர் ஊருவரிகே வன்னிலா அத்தன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அந்த மக்களின் பாரம்பரிய நிலப் பயன்பாடு தொடர்பாக நிலவும் சிரமங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பழங்குடி மக்கள் எவ்வித தடங்கலும் இன்றி தங்களது பாரம்பரிய நிலங்களை அனுபவிப்பதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு எனவும், அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment