காலி தேசிய மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றி ஒன்றில் இன்று (16) நண்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்மாற்றியில் தீ பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புற்றுநோய் பிரிவிற்கான மின்சார விநியோகத்தை முழுமையாக துண்டிப்பதற்கு மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும், தீ விபத்தின் போது உடனடியாக செயற்பட்ட மருத்துவமனை ஊழியர்களும் காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக எனது செய்தியாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment