Friday, June 19, 2026

இறக்குமதி கொடுப்பனவுகளுக்கு புதிய விதிமுறைகள் இன்று முதல் வர்த்தமானி அமுல்!

 

இறக்குமதி நடவடிக்கைகளின் போது வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் வினைத்திறனாகக் கண்காணிக்கும் நோக்கில், புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இதில் கையொப்பமிட்டுள்ளார்.

புதிய விதிமுறைகளின்படி, செய்யப்படும் ஒவ்வொரு இறக்குமதிக் கொடுப்பனவிற்கும் வங்கிகள் ஒரு சிறப்பு எண்ணை ஒதுக்க வேண்டும்.

மேலும், TIN எண் உட்பட, பரிவர்த்தனை தொடர்பான அனைத்து தகவல்களையும் சுங்கத் திணைக்களத்திற்குத் தெரிவிப்பது வங்கிகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இறக்குமதியாளர்கள் பொருட்களின் இறக்குமதிக்காக முன்பணம் செலுத்துவதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தில் தகுதிபெற்ற இறக்குமதியாளர்களாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

பதிவு செய்யப்படாத இறக்குமதியாளர்களுக்கு வணிக வங்கிகள் முன்பணம் செலுத்த அனுமதிக்கப்படாது.

0 comments:

Post a Comment