Sunday, June 21, 2026

வெல்லம்பிட்டிய வெதுப்பகத்தில் தீ விபத்து; தீயணைப்பு படையினர் விரைந்து நடவடிக்கை!

 

வெல்லம்பிட்டிய நகரில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீ பரவியமை தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தீயணைப்பு படையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment