(ஆர்.நிரோசன்)
மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒரு இந்து மகளிர் பாடசாலையான
மட்/ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (14) திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.
இப்போட்டியானது கல்லூரியின் அதிபர்
எஸ்.டி.முரளிதரன்
தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வளையகல்விப் பணிப்பாளர் டி.ரவி , தேசிய கல்வியியல் கல்லூரியின்
உடற்கல்வி விரிவுரையாளர்
திருமதி. டி. மோகனக்குமார்,
உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) வி.லவக்குமார் அவர்களும் , சிறப்பு அதிதிகளாக வளையக் கல்வி அலுவலகத்தில் உத்யோஸ்தர்கள்
கே. ரவீந்திரன் ,ஏ.பிரசாத்
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் அணி நடை,உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன்,
முதலாம் இடத்தினை 378 புள்ளிகளைப் பெற்று நளாயினி இல்லமும், இரண்டாம் இடத்தினை 334 புள்ளிகளைப் பெற்று சாரதா இல்லமும், மூன்றாம் இடத்தினை 314 புள்ளிகளைப் பெற்று அருந்ததி இல்லமும் பெற்றுக் கொண்டது.
இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவிகள், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment