Saturday, May 2, 2026

சிசிலியா தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா-2026!!








மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா (30) திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.


கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு விசேட பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால்  ரத்னசேகர அவர்களும் கௌரவ அதிதியாக  மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்  ஆகியோர் கலந்துகொண்டு சமாதான புறாவைப் பறக்க விட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.


இந் நிகழ்வின்போது கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள், உயர் தரத்தில் சித்தி அடைந்து பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகிய மாணவர்கள் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் பல்வேறு சாதனைகள் படைத்த மாணவர்கள் ஆகியோரிற்கு அதிதிகளால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.


மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதில் கடந்த வருடம் தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தினைப் பெற்றுக் கொண்ட அட்சய லட்சுமி பரதநாட்டியம் மீள் அரங்கேற்றப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டது.


 பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு 

இதன்போது பாடசாலை நிருவாகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment