Saturday, May 23, 2026

நாடு முழுவதும் இதுவரை 2,388 வெசாக் தானசாலைகள் பதிவு

 

நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 2,388  தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) தெரிவித்துள்ளது.


மே 29 ஆம் திகதி வரை பதிவுகள் தொடரும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் செயலாளர் சாமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகங்கள் மூலம் பதிவு நடைபெற்று வருகிறது.


ஏற்பாட்டாளர்களுக்காக சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் சுகாதார அதிகாரிகள் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment