எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பகுதிகளில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆற்றங்கரையோர மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment