Thursday, May 21, 2026

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பெறுமதிமிக்க ஓவியங்கள் மாயம்

தேசிய கலைக்கூடத்திலிருந்து தொல்பொருள் பெறுமதியைக் கொண்ட 42 பழைமைவாய்ந்த ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.


இன்று (21) நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது பதிலளித்த போதே அமைச்சர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.


பொருட்கள் ஆய்வுச் சபையொன்றினால் கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய கலைக்கூடத்தின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே, இந்த ஓவியங்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பான விபரங்கள் தெரியவந்துள்ளன.


இதற்கமைய, கலைக்கூடத்தின் இருப்புப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மொத்த ஓவியங்களின் எண்ணிக்கை 281 ஆகும். எனினும், தற்போது தேசிய கலைக்கூடத்தில் 239 ஓவியங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.




0 comments:

Post a Comment