மின்சாரம் தாக்கியதில் 74 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
உரகஸ்மன்ஹந்திய பகுதியில் நேற்று முன்தினம் (13) மாலை குறித்த பெண்ணானவர் அவரது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்றினால் மரமொன்று முறிந்து விழுந்த நிலையில் அதனுடன் சேர்த்து மின்கம்பியொன்றும் அறுந்து விழுந்த நிலையில் கிடந்துள்ளது.
எதிர்பாராத விதமாக அவ் வழியில் வந்த பெண் மின்கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
.png)
0 comments:
Post a Comment