Friday, May 15, 2026

108 மில்லியன் பெறுமதியான கொக்கெய்னுடன் ஒருவர் கைது

 



கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.108 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளை நாட்டுக்கு கடத்த முற்பட்ட வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் இந்திய பிரஜை என்பதுடன் அவர் ஒரு புவியியலாளர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்த இரண்டு சான்றிதழ் ஆவணங்களும், மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 150 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. 



இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த விமானப் பயணியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment