நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 35,228 டெங்கு நோயாளர்களும், டெங்கு காய்ச்சல் காரணமாக 20 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் செறிந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமு முழுவதும் நிலவி வரும் பலத்த மழைவீழ்ச்சியே இந்த டெங்கு தொற்று அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment