சிறுவர் தொழிலாளர் முறையை ஒழிப்பது என்பது வெறும் சட்ட ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல, அது ஒரு சமூக மனிதாபிமானப் பொறுப்பு என்றும் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மஹரகமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சுமார் 7.8 சதவீத சிறு தொழிலில் ஈடுபடும் நிலையில், இலங்கையில் அந்த வீதம் வெறும் ஒரு சதவீதமாக மட்டுமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்றும், 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆபத்தற்ற பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும், அவர்கள் அச்சமின்றியும் சுரண்டலின்றியும் பாதுகாப்பான சூழலில் வளர்வதை உறுதி செய்யவும் அரசாங்கம் பல்வேறு கொள்கை ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment