இச்சம்பவம் திட்டமிடப்பட்ட ஒரு செயலாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சிற்றூந்து ஒன்றினுள் பெண்ணொருவரின் உடலம் காணப்படுவதாக நேற்று (17) பிற்பகல் தெல்தெனிய காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய இவ்வுடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் வெலிகம - குருந்து கொரட்டுவ - பலல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண், தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் நுவரெலியா பகுதியிலுள்ள தங்குமிடமொன்றிற்கு நேற்று முன்தினம் வருகை தந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த காதலன் அந்தப் பெண்ணின் உடலத்தை அன்றைய தினம் இரவே சிற்றூந்தில் ஏற்றி, நேற்று காலை தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
பின்னர் காதலனே தெல்தெனிய காவல்துறையினருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இத்தகவலை வழங்கியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
சந்தேகிக்கப்படும் காதலன் கன்னொருவ பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை குறிப்பிட்டுள்ள போதிலும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
0 comments:
Post a Comment