நாடாளுமன்றத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு வருமானவரி (திருத்தச்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் தனது சான்றொப்பத்தை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, இச்சட்டம் 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு வருமானவரி (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருவதாக நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
இப்புதிய சட்ட விதிகளின்படி, நாட்டில் மேற்கொள்ளப்படும் சில குறிப்பிட்ட முக்கிய நிதிப் பரிமாற்றங்களின் போது வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிதிப் பரிமாற்றங்கள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக கண்காணிக்கப்படவுள்ளன.
0 comments:
Post a Comment