இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கான குடியகல்வு மற்றும் பதிவு நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் 'குடியகல்வு மற்றும் வெளிநாட்டவர் (திருத்த) விதிகள் 2026'ஐ இந்திய உள்துறை அமைச்சு (MHA) அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன.
இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருக்க விரும்பும் வெளிநாட்டவர்கள், தாங்கள் நாட்டிற்கு வந்திறங்கியதிலிருந்து 180 நாட்கள் முடிவடைவதற்கு முன்னர் எந்த நேரத்திலும் தங்களது பதிவை நிறைவு செய்யலாம்.
காலதாமதமான பதிவுகள் இனி அவசர சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
பெற்றோரில் ஒருவர் இந்தியப் பிரஜையாக இருந்து, பிள்ளைக்கு இந்தியக் குடியுரிமையைத் தக்கவைக்க விரும்பினால் பதிவு நடைமுறை பொருந்தாது.
அதேவேளை, இந்தியாவில் வாழும் சிறுவர் ஒருவர் வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்றால், அது குறித்து 30 நாட்களுக்குள் பெற்றோர் பதிவு அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும்.
புதிய டிஜிட்டல் முறையீட்டு வசதி மூலம், பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்நிலை வழியாக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
இந்த முறையீடுகள் 60 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும்.
0 comments:
Post a Comment