Wednesday, June 17, 2026

நாடளாவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக சதொச அறிவிப்பு

 

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், பல அத்தியாவசிய நுகர்பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இந்த திருத்தப்பட்ட புதிய விலைகள் நாளை (18) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் அமுலுக்கு வரவுள்ளன.

அதன்படி ,

கோதுமை மா-169.00 - 159.00

பொன்னி சம்பா அரிசி-235.00 - 229.00

உள்நாட்டு வெள்ளை நாடு அரிசி-209.00-204.00

வெள்ளை பச்சை சம்பா அரிசி - 240.00 -235.00

சிவப்பு நாடு அரிசி - 239.00 - 234.00

சம்பா சிவப்பு பச்சை அரிசி - 229.00 - 224.00

பெரிய கடலை - 344.00 - 339.00

வெள்ளை பச்சை அரிசி - 199.00 - 196.00

வெள்ளை சீனி - 219.00 - 217.00

நாளை முதல் பொதுமக்கள் நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு லங்கா சதொச விற்பனை நிலையத்திலும் இந்த திருத்தப்பட்ட விலைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment