அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு முன்னைய நாளின் மாற்று வீதமான 337.00/75 இலிருந்து, தற்போது 332/334 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.
அத்துடன் இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் போது ரூபாயின் மதிப்பு 336.50 என்ற உச்ச மட்டத்திலிருந்து 328.00 ரூபாய் என்ற குறைந்தபட்ச மட்டம் வரை பதிவாகியிருந்தது.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு எதிரான தந்தி பரிமாற்ற வீதத்தின் அடிப்படையில், கொள்வனவு விலை 332.3805 ரூபாயாகவும், விற்பனை விலை 342.0821 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், தற்போது 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களின் ஏலவிற்பனை இடம்பெற்று வருகின்றது.
மறுபுறம், இரண்டாம் நிலை பிணைமுறி சந்தையில் குறுகிய கால பிணைமுறிகளின் வருவாய் வீதம் வீழ்ச்சியடைந்து வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 15.12.2029 அன்று முதிர்ச்சியடையும் பிணைமுறியின் வருவாய் வீதம் 11.95/12.15 சதவீதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
01.08.2030 அன்று முதிர்ச்சியடையும் பிணைமுறியின் வருவாய் வீதம், முன்னைய 12.15/20 சதவீதத்திலிருந்து 12.20/30 சதவீதமாக எவ்வித மாற்றமுமின்றி உயர்வடைந்துள்ளது.
0 comments:
Post a Comment