அம்பாறை, இறக்காமம் பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட நபர் ஒரு மௌலவி என காவல்துறை வெளியிட்ட அறிக்கை தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இறக்காமக் கிளை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சான்றிதழ் பெற்ற மௌலவி அல்லர் என்றும், அவர் எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் கல்வி கற்கவில்லை என்றும், ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நபர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிலோ அல்லது அதன் இறக்காமக் கிளையிலோ உறுப்பினராக இல்லை என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

0 comments:
Post a Comment