Tuesday, June 9, 2026

தலவத்துகொட உணவகத்தில் தீப்பரவல் – மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைப்பு

 

கொழும்பு – தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவல் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


தீப்பரவலுக்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment