Monday, June 8, 2026

குடும்பத் தகராறு: கணவனை ஆயுதத்தால் தாக்கிய மனைவி கைது

 

ஹொரணை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட அரம்பகந்த பகுதியில் நேற்று (07) அதிகாலை ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது, கணவனைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

அரம்பகந்த பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே, வீட்டின் உள்ளே வைத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே, உயிரிழந்தவரின் மனைவியான சந்தேகநபர் ஹொரணை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment