குருநாகல் காவல்துறை பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், வழக்கு ஒன்றில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அறிவித்தலை பெற்றுக்கொண்ட போதிலும், குறிப்பிட்ட திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியுள்ளார்.
நீதிமன்றத்தில் சமுகமளிக்காததற்கான முறையான மற்றும் சரியான காரணங்களை அவர் சமர்ப்பிக்கத் தவறியதால், குருநாகல் பிரதான நீதவான் அவரை நீதிமன்ற சிறைக் கூடத்தில் சிறை வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, அந்த காவல்துறை உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ சீருடையுடனேயே சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீதிமன்றக் கூண்டில் வைக்கப்பட்டு, பின்னர் நீதவானால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment