Thursday, July 2, 2026

களுத்துறையில் முச்சக்கரவண்டி விபத்து: இருவர் பலி - இருவர் படுகாயம்!

 

களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (2) அதிகாலை வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகக் காவல்துறை தெரிவிவித்துள்ளது.



முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment