Friday, July 3, 2026

அடுத்த சில மாதங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

 

நாட்டில், ஜுலை மாதம் முதல் எதிர்வரும் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் அதிகளவில் வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ காலநிலையின் தாக்கம் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஒக்டோபர் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாக கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment