கண்டி - குண்டசாலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மெனிக்ஹின்ன பகுதியில் 'முத்து' என்ற வளர்ப்பு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (30) இரவு 8.00 மணியளவில் மெனிக்ஹின்ன கணதேவி கோவில் மைதானத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் மெனிக்ஹின்ன முடுங்கோத் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் மாமா ஆவார்.
யானை கட்டப்பட்டிருந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்து ரொட்டியை எடுத்து, இந்த நபர் யானைக்கு உணவளிக்க முயன்றபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யானை தாக்கியபோது அங்கிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றக் கடுமையாகப் போராடியும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
தாக்குதலுக்கு பின்னர் யானை அதே இடத்திலேயே தொடர்ந்து நின்றுகொண்டிருந்ததால், சம்பவ இடத்திலிருந்து உடலை மீட்பதற்கு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வரை போராடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் மனித உயிர்களைப் பறித்த இந்த யானை, தற்போது தன்னை அன்போடு கவனித்து வந்த நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவரின் உயிரையும் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெல்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment