கம்பஹா, வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய காவல்துறை சாவடியில் பணியாற்றும் ஒரு உதவி காவல்துறை அதிகாரி பொதுமக்களிடம் முறையற்ற மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், 2026 ஜூலை 23 ஆம் திகதி,வத்துப்பிட்டிவல மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
சீருடையில் இருந்த அந்த அதிகாரி, அங்கிருந்தவர்களுடன் கடுமையான, அச்சுறுத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்தே அவர்,நிறுவனங்கள் நெறிமுறை விதிகளின்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment