Tuesday, July 7, 2026

கனடாவில் குடிநீர் விவகாரத்தில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள்

 

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாண அரசு, குடிநீர் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கு இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்தநாட்டுப் பிரஜைகளும், சமூக அமைப்புகளும், பூர்வகுடி மக்களும் வலியுறுத்தியுள்ளது.


கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், மாகாணத்தின் 'தூய நீர் சட்டம்' தொடர்பாக நடத்தப்பட்ட பொதுமக்களுடனான ஆலோசனைகளின் உள்ளடக்கங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மாகாணத்தின் நீர் பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் கடந்த கால நீரின் தரம் குறித்த விபரங்களை உள்ளடக்கிய, வரைபடங்கள் (Interactive maps) மற்றும் தரவுப் பலகைகளுடன் Dashboards ஒன்றை மாகாண அரசு உருவாக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களின் மூலம் பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, 'தூய நீர் சட்டத்தில்' மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என நியூ பிரன்சுவிக் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மே மாதம் நடைபெற்ற மாகாண சட்டசபைக் கூட்டத் தொடரின் போது, தூய குடிநீரைப் பெறுவதற்கான சட்டபூர்வ உரிமையை முழுமையான சட்டமாக இயற்ற வேண்டும் எனப் பல தரப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment