Tuesday, July 7, 2026

சிறுவனை கடித்த காட்டு ஓநாய் : கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

கனடாவின் ஒன்ராறியோ, விட்பி (Whitby) பகுதியில் உள்ள விளையாட்டு பூங்காவிற்குள் புகுந்த காட்டு ஓநாய் (Coyote) ஒன்று, இரண்டு வயது சிறுவனின் முகத்தில் கடித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வானியர் பூங்காவில் (Vanier Park) இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்த காட்டு ஓநாய், அங்கிருந்த சிறுவனை திடீரெனத் தாக்கியுள்ளது.

இதனையடுத்து, சிறுவனின் பாதுகாவலரும் அங்கிருந்த பொதுமக்களும் சத்தமிட்டு அந்த ஓநாயை விரட்டியடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த ஒரு மணித்தியாலத்திற்குள் அதே பகுதியில் ஆபத்தான நிலையில் நடமாடிய மற்றொரு காட்டு ஓநாயை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விட்பி மற்றும் மார்க்கம் பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறான ஓநாய் தாக்குதல்களில் மேலும் மூன்று சிறுவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காட்டு ஓநாய்களின் இவ்வாறான ஆக்ரோஷமான நடத்தை மிகவும் அரிதானது என்றாலும், பொதுமக்கள் பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளுக்கு அருகில் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், செல்லப்பிராணிகளை கயிற்றால் கட்டி வைத்திருக்கவும், சிறுவர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்கவும், ஓநாய்கள் தென்பட்டால் உடனடியாக அவசர உதவி இலக்கமான 911க்கு அழைக்குமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment