திருகோணமலை, குச்சவெளி காவல் பிரிவுக்குட்பட்ட நிலாவெலி கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் குச்சவெளி காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த (டச்சு) சுற்றுலாப் பயணி ஆவார்.
நிலாவெலி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த வேளையில், நேற்று (26) மாலை நிலாவெலி கடற்கரையில் நீராடச் சென்றதாகவும், அப்போது திடீரென ஏற்பட்ட கடல் நீரோட்டத்தில் சிக்கி அவர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்துக் குச்சவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment