Thursday, July 2, 2026

அரிசியை உப உணவு உற்பத்திகளுக்கும் பயன்படுத்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டம் - அமைச்சர் லால் காந்த

 

அரிசியை நாட்டின் பிரதான உணவாக மாத்திரமன்றி, ஏனைய உப உற்பத்திகளுக்காகவும் பயன்படுத்துவதை விரிவுபடுத்துவதற்கான நீண்டகாலத் திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்து வருவதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், நெல் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசியை, தினசரி முதன்மை உணவாக உட்கொள்வதற்கும் அப்பால் ஏனைய பல உற்பத்திகளுக்கு மூலப்பொருளாகப் பயன்படுத்துவது குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.



சந்தையில் ஆரோக்கியமான போட்டித்தன்மையை உருவாக்குவதன் மூலம் விவசாயிகளைப் பாதுகாப்பதும், அதற்கான தடைகளை நீக்குவதுமே இந்தத் திட்டத்தின் பிரதான தூண்களாகக் கருதப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசேட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்ட ஆயத்தங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment